இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்: படைத்தளபதி பலி
|ஹிஸ்புல்லா இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
காசா,
இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் நடைபெற்றுவரும் மோதல் தீவிரமாகி உள்ளது . ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு அக்.7 ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முதன்மை தலைவர் பலியானார். இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியுள்ளது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தனது வடக்கு எல்லைக்குள் ஊடுருவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் எல்லையில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு லெபனானில் உள்ள கிர்பெட் செல்ம் என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஹிஸ்புல்லா நிலைகள் மீதான தாக்குதலில் இதுவரை குறைந்தது 150 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.