உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 50 பேர் பலி
|11 May 2024 3:56 AM IST
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.
காபுல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கையி தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.