< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நேபாளத்தில் கனமழை; வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
|7 July 2024 6:45 PM IST
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காத்மாண்டு,
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.