< Back
உலக செய்திகள்
காங்கோ நாட்டில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120 பேர் பலியாகியுள்ளதாக தகவல்..!
உலக செய்திகள்

காங்கோ நாட்டில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120 பேர் பலியாகியுள்ளதாக தகவல்..!

தினத்தந்தி
|
14 Dec 2022 3:58 AM IST

காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள.

கின்ஷாசா,

காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், முழு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. என்1 சாலை 3-4 நாட்களுக்கு மூடப்படலாம் என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக அங்கு இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கோவின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் முயாயாவால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட படங்கள், ஒரு பெரிய சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

மோசமான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விரைவான நகரமயமாக்கல், காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நகரம் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

மேலும் செய்திகள்