< Back
உலக செய்திகள்
பிரேசிலில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

பிரேசிலில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

தினத்தந்தி
|
5 May 2024 8:40 PM GMT

பிரேசிலில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலியா,

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரேசிலில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணத்தில் மொத்தம் உள்ள 497 நகரங்களில் சுமார் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல பகுதிகளில் வெள்ளம் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. போர்ட்டோ அலெக்ரேவில் உள்ள சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்