< Back
உலக செய்திகள்
ஈகுவடாரில் கடும் நில சரிவு:  6 பேர் பலி; 19 பேர் காயம்
உலக செய்திகள்

ஈகுவடாரில் கடும் நில சரிவு: 6 பேர் பலி; 19 பேர் காயம்

தினத்தந்தி
|
17 Jun 2024 11:42 PM IST

எல் சல்வடார் நாட்டில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட மழை மற்றும் நில சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

குவிட்டோ,

தென்அமெரிக்க நாடான ஈகுவடார் நாட்டில் பனோஸ் டி அகுவா சான்டா நகரின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், நில சரிவுகளும் ஏற்பட்டன. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 19 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி பனோஸ் நகர மேயர் மிகுவேல் குவரா கூறும்போது, நில சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் சாலைகளில் பயணிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, ஈகுவடாரின் பொது பணிகளுக்கான மந்திரி ராபர்ட்டோ லூக் கூறும்போது, புயலால் 3 நீர்மின் உலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

கடந்த சில நாட்களாக, புயல் மற்றும் மழை ஆகியவற்றால், மத்திய மற்றும் தென்அமெரிக்கா முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வெள்ளம், பாறைகள் உருண்டோடுவது மற்றும் நில சரிவுகள் ஆகிய ஆபத்துகளுக்கான சாத்தியங்கள் உள்ளன என பல்வேறு நாடுகளும் எச்சரிக்கை விடுத்து இருந்தன.

இந்த வாரத்தில், எல் சல்வடார் நாட்டில் கனமழையை தொடர்ந்து, சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. மழை மற்றும் நில சரிவால் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்