< Back
உலக செய்திகள்
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூட்டில்  50 பேர் பலி
உலக செய்திகள்

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி

தினத்தந்தி
|
8 April 2023 10:52 PM IST

நைஜீரியாவின் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர்.

இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்