< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை - 7 பேர் உயிரிழப்பு
|11 Nov 2022 3:58 AM IST
துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மணிலா,
பிலிப்பைன்சின் தெற்கு பசிலான் மாகாணத்தில் உள்ள புகான் நகரில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், உள்ளூர் கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 3 ராணுவ வீரர்களும், கிளர்ச்சிப் படையை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.