< Back
உலக செய்திகள்
கோழி இறைச்சிக்குள் சிக்கிய துப்பாக்கி - விமான நிலையத்தில் பரபரப்பு
உலக செய்திகள்

கோழி இறைச்சிக்குள் சிக்கிய துப்பாக்கி - விமான நிலையத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
10 Nov 2022 5:20 PM IST

அமெரிக்காவில் விமான நிலையத்தில் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா,

அமெரிக்காவின் புளோரிடா மாகாண விமான நிலையத்தில் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைத்துப்பாக்கியுடன் போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏற முயன்ற பயணி சோதனையின் போது அதிகாரிகளிடம் பிடிபட்டார். துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்தனவா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்