< Back
உலக செய்திகள்
கிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல்

Image Courtacy: PTI

உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல்

தினத்தந்தி
|
26 Jun 2023 12:45 AM IST

கிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

ஏதென்ஸ்,

ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் கிரியாகோஸ் வெற்றி பெறுவார் என அங்குள்ள கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்