< Back
உலக செய்திகள்
கிரீஸ்:  காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ
உலக செய்திகள்

கிரீஸ்: காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ

தினத்தந்தி
|
6 Sept 2023 7:13 PM IST

கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் வடக்கே சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், நிலச்சரிவு ஏற்பட்டது. பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த சூழலில், பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சூறாவளி பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேரை காணவில்லை. கிரீஸ் நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

மேலும் செய்திகள்