< Back
உலக செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார்
உலக செய்திகள்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார்

தினத்தந்தி
|
2 Jan 2023 11:28 PM IST

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கும், மாகாண கவர்னர்களுக்கும் தேர்தல் நடந்தது.

நியூயார்க்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கும், மாகாண கவர்னர்களுக்கும் தேர்தல் நடந்தது.

அந்த வகையில் நியூயார்க் மாகாண கவர்னர் பதவிக்கு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் பெண் அரசியல் தலைவரான கேத்தி ஹோச்சுலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளரான லீ செல்டினும் போட்டியிட்டனர்.

இதில் கேத்தி ஹோச்சுல், லீ செல்டினை தோற்கடித்து, நியூயார்க் மாகாணத்தின் 57-வது கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நியூயார்க் மாகாணத்தின் முதல் பெண் கவர்னர் என்கிற பெருமையை பெற்றார். இந்த நிலையில் கேத்தி ஹோச்சுல் நேற்று நியூயார்க் மாகாண கவர்னராக பதவியேற்றார். அப்போது அவர் மாகாணத்தின் பொது பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.

மேலும் செய்திகள்