< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
3 ஆயிரம் ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்...!
|10 Sept 2022 4:00 PM IST
கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலக தோட்டத்தில் 3 ஆயிரம் ஆடுகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு வகையான செயலிகளையும், புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரத்து 500 ஆடுகளுக்கு கூகுள் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது.
அந்த வகையில் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலக தோட்டத்தில் உள்ள புல்தரைகளை சீராக வைத்துக் கொள்ள சுமார் 3, 500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியுள்ளது.
பெட்ரோல், டீசலில் இயங்கும் எந்திரங்களை பயன்படுத்தி தோட்டப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாக
சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் ஆடுகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.