< Back
உலக செய்திகள்
இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருந்துகள் அன்பளிப்பு - இந்திய அரசு வழங்கியது
உலக செய்திகள்

இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருந்துகள் அன்பளிப்பு - இந்திய அரசு வழங்கியது

தினத்தந்தி
|
6 Feb 2023 1:06 AM IST

இலங்கைக்கு அடுத்த மாத இறுதிக்குள் 500 பேருந்துகளையும் வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை கடந்த 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இந்நிலையில் இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டிற்கு இந்தியா 500 பேருந்துகளை வழங்க உள்ளது.

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு இந்த பேருந்துகளை வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக 50 பேருந்துகள் அதிபர் மாளிகையில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் வழங்கப்பட்டது.

இந்த பேருந்துகளின் இயக்கத்தை ரணில் விக்கிரமசிங்கே கொடியசைத்து துவங்கி வைத்தார். இலங்கைக்கு கடந்த மாதம் 75 பேருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் 500 பேருந்துகளையும் வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்