< Back
உலக செய்திகள்
ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி

Image Credit:www.armyrecognition.com

உலக செய்திகள்

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி

தினத்தந்தி
|
2 Oct 2022 9:28 AM IST

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் வான்வழி பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு ஜெர்மனி வழங்க உள்ளது.

கீவ்,

உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷிய படைகளின் ஆளில்லா விமானங்கள்(டிரோன்கள்) மூலம் தாக்குதல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களின் மூலம் ரஷியா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க உள்ளது.

ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை மந்திரி கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் சனிக்கிழமை உக்ரைனில் உள்ள ஒடெசாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், டிரோன் தாக்குதல்களைத் தடுக்க உதவும் வகையில், 4 அதிநவீன "ஐஆர்ஐஎஸ்-டி" வான் பாதுகாப்பு அமைப்புகளை, வரும் நாட்களில் ஜெர்மனி உக்ரைனுக்கு வழங்க உள்ளது என்று கூறினார்.

உலகின் அதிநவீன "ஐஆர்ஐஎஸ்-டி" வான் பாதுகாப்பு ஆயுதம் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட 150 மில்லியன் யூரோக்கள்(147 மில்லியன் டாலர்கள்) செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உக்ரைன் ஆயுதங்கள் வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜெர்மனி இந்த முடிவை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்