< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜெர்மனி: முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; 4 பேர் பலி
|4 March 2024 2:38 PM IST
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.
பெர்லின்,
ஜெர்மனி நாட்டின் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று உள்ளது. செவிலியர்கள் பணியாற்ற கூடிய இந்த காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், 4 பேர் பலியாகி உள்ளனர். 58 பேர் காயமடைந்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.