< Back
உலக செய்திகள்
நேபாளத்தில் வரும் நவம்பர் 20-ந் தேதி பொது தேர்தல்:  அரசு அறிவிப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் வரும் நவம்பர் 20-ந் தேதி பொது தேர்தல்: அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
4 Aug 2022 10:03 PM IST

நேபாளத்தில் வருகிற நவம்பர் 20-ந் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்து அரசு அறிவித்து உள்ளது.



காத்மண்டு,



நேபாளத்தில் பொது தேர்தல் நடத்துவதற்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், நேபாளத்தில் வருகிற நவம்பர் 20ந்தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நாட்களுக்கு பதிலாக 2 நாட்கள் கழித்து தேர்தல் நடத்துவதற்கான நாட்களை அரசு அறிவித்து உள்ளது.

எனினும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் அதனை வரவேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையாளர் தினேஷ் குமார் தபலியா, தேர்தல் தேதி மாற்றத்தினால், தேர்தலுக்கு தயாராவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.

அவை பிரதிநிதிகள் மற்றும் மாகாண சட்டசபையின் பதவி காலம் நவம்பர் இறுதியிலேயே நிறைவடைய உள்ளது. நாங்கள் தேர்தல் அட்டவணையை விரைவில் வரைவு செய்து அவற்றை வெளியிடுவோம் என கூறியுள்ளார்.

தேர்தலின்போது, நாடு முழுவதுமுள்ள வாக்காளர்கள், நாடாளுமன்றத்தின் மத்திய மற்றும் மாகாண சட்டசபைக்கான தங்களது பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

மேலும் செய்திகள்