< Back
உலக செய்திகள்
காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
உலக செய்திகள்

காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தினத்தந்தி
|
21 Jan 2024 2:20 AM IST

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காம்பாலா,

தென் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் காம்பாலாவில் நடைபெற்ற 19-வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது காசா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவர் கூறியதாவது;-

"வளர்ச்சியும், முன்னேற்றமும் நிலைத்தன்மையை அடிப்படையாக கொண்டவை. உலகமயமாக்கப்பட்ட சூழலில், மோதல்கள் எங்கு நிகழ்ந்தாலும், அனைத்து இடங்களிலும் விளைவுகள் ஏற்படுகின்றன.

உக்ரைன் போர் விவகாரத்தில் எரிபொருள், உணவு மற்றும் உரம் விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கத்தை நாம் பார்த்தோம். தற்போது காசாவின் சூழலை புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் நிலையான தீர்வு தேவைப்படுகிறது.

பயங்கரவாதத்தையும், மக்களை பணயக்கைதிகள் ஆக்குவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அனைத்து நாடுகளும் எப்போதும் மதிக்க வேண்டும்."

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்