< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது

கோப்புப்படம்

உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது

தினத்தந்தி
|
12 Sept 2024 12:40 AM IST

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் கடந்த 11 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதனிடையே பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41, 084 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 95 ஆயிரத்து 29 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதே சமயம், மேற்கு கரை பகுதியில் ஹமாசின் ஊடுருவல் இருப்பதால் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், அங்கு திடீர் திடீரென தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 64 பாலஸ்தீனியர்கள் மரணம் அடைந்ததாகவும், 104 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்