< Back
உலக செய்திகள்
போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே மோதல்; பொதுமக்கள் உள்பட 11 பேர் பலி

Image Courtesy: AFP

உலக செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே மோதல்; பொதுமக்கள் உள்பட 11 பேர் பலி

தினத்தந்தி
|
13 Aug 2022 4:56 AM IST

போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே நடந்த மோதலில் பொதுமக்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த மோதலை தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

பொதுமக்கள் உள்பட கண்ணில் பட்டவர்கள் அனைவரும் மீதும் இரு கும்பலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலில் மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்