< Back
உலக செய்திகள்
பிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

பிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்

தினத்தந்தி
|
9 Jan 2024 5:52 PM IST

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாரீஸ்,

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பதவியேற்றார். ஆனால் பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

மேலும் இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். இதனிடையே அந்நாட்டின் பிரதமராக இருந்த 62 வயதான எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக 34 வயதான அந்நாட்டின் கல்வி மந்திரி கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்ரியல் அட்டல், தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்தவர் ஆவர்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டால், பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பையும், அதோடு பிரதமராக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்