< Back
உலக செய்திகள்
ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்... தைவான் விவகாரத்தில் உறுதி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்... தைவான் விவகாரத்தில் உறுதி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

தினத்தந்தி
|
16 Oct 2022 9:39 AM IST

ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வந்துவிட்டது என அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பிஜீங்,

சீனா நாட்டின் அதிபராக 2012 முதல் ஜி ஜின்பிங் செயல்படு வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுக்கு ஒருமுறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கூட்டத்த்லும் ஜி ஜின்பிங் சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

கம்யூனிஸ்ட் தேசிய காங்கிரஸ் கூட்டத்தை துவங்கி வைத்து பேசிய சீனர் அதிபர் ஜி ஜின்பிங், ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. குழப்பத்தில் இருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றியுள்ளது.

தைவான் பிரிவினைவாதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாகவும், பெரும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது' என்றார்.

மேலும் செய்திகள்