பார்பி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வரை... 2023 கூகுள் தேடலில் டாப்-10 நிகழ்வுகள்
|பொழுதுபோக்கு குறித்த தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியது.
நியூயார்க்:
இணையத்தில் தகவல்களை தேடுவோரின் முதன்மைத் தேர்வாக கூகுள் தேடுபொறி இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இவ்வாறு கூகுள் மூலம் தேடப்படும் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்நிறுவனம் பட்டியலிடுகிறது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டிருக்கிறது.
செய்திகளைப் பொருத்தவரை உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பிப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பொழுதுபோக்கு குறித்த தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியது. அதைத் தொடர்ந்து ஓப்பன்ஹைமர், இந்திய த்ரில்லர் திரைப்படமான ஜவான் ஆகிய படங்கள் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தி லாஸ்ட் ஆஃப் அஸ், வெனஸ்டே மற்றும் ஜின்னி அண்ட் ஜார்ஜியா ஆகியவை உள்ளன.
டாப்-10 செய்திகள்
இஸ்ரேல் மற்றும் காசாவில் போர்
டைட்டானிக் நீர்மூழ்கி
துருக்கி நிலநடுக்கம்
ஹிலாரி சூறாவளி
இடாலியா சூறாவளி
லீ சூறாவளி
மைனே துப்பாக்கி சூடு
நாஷ்வில்லே துப்பாக்கி சூடு
சந்திரயான்-3
சூடான் போர்
டாப்-10 திரைப்படங்கள்
பார்பி
ஓப்பன்ஹைமர்
ஜவான்
சவுண்ட் ஆப் ஃப்ரீடம்
ஜான் விக்: சாப்டர் 4
அவதார்: தி வே ஆப் வாட்டர்
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
கடார் 2
கிரீட்-III
பதான்
டாப்-10 விளையாட்டு பிரபலங்கள்
டாமர் ஹேம்லின் (கால்பந்து)
கிலியன் மாப்பே (கால்பந்து)
டிராவிஸ் கெல்ஸ் (கால்பந்து)
ஜா மோரன்ட் (கூடைப்பந்து)
ஹாரி கேன் (கால்பந்து)
நோவக் ஜோகோவிச் (டென்னிஸ்)
கார்லஸ் அல்காரஸ் (டென்னிஸ்)
ரச்சின் ரவீந்திரா (கிரிக்கெட்)
ஷுப்மன் கில் (கிரிக்கெட்)
கைரி இர்வின் (கூடைப்பந்து)
டாப்-10 தொலைக்காட்சி நிகழ்ச்சி
தி லாஸ்ட் ஆப் அஸ்
வெனஸ்டே
கின்னி அண்ட் ஜார்ஜியா
ஒன் பீஸ்
கலைடாஸ்கோப்
கிங் ஆப் லேண்ட்
டி குளோரி
தட் 90s ஷோ
தி பால் ஆப் தி ஹவுஸ் ஆப் அஷர்
ஷேடோ அண்ட் போன்.