< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நடு வானில் இந்திய போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் போர் விமானம்..!
|19 Aug 2022 7:57 PM IST
இந்திய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் போர் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படையின் Su-30 MKI ரக போர் விமானங்களில் விமானப் படை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது நடுவானில் இந்திய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது.
இந்தியா-பிரான்ஸ் இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக இந்த செயல் நடைபெற்றுள்ள நிலையில், பிரான்ஸ் விமானப் படைக்கு இந்திய விமானப் படை நன்றி தெரிவித்து உள்ளது.