< Back
உலக செய்திகள்
பிரான்ஸ்:  பெற்ற மகள்கள் 3 பேரை குத்தி கொன்ற கொடூர தந்தை
உலக செய்திகள்

பிரான்ஸ்: பெற்ற மகள்கள் 3 பேரை குத்தி கொன்ற கொடூர தந்தை

தினத்தந்தி
|
27 Nov 2023 2:25 PM IST

டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, 3 குழந்தைகளையும் கொன்ற விவரங்களை அவர் கூறியுள்ளார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசித்து வரும் 41 வயதுடைய நபருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் 3 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், 3 மகள்களையும் அவர் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார். இதன்பின்பு தப்பியோடி விட்டார். அவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, 3 குழந்தைகளையும் கொன்ற விவரங்களை அவர் கூறியுள்ளார்.

இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின்பு அவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் செய்திகள்