< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கஜகஸ்தானில் பயங்கர காட்டுத்தீ: 14 பேர் பலி
|11 Jun 2023 5:04 AM IST
கஜகஸ்தானில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 14 பேர் உயிரிழந்தனர்.
அஸ்தனா,
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள நாடு கஜகஸ்தான். இந்நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 14 உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.