< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகம்: விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
|25 Sept 2024 12:56 PM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு நாட்டுப்பணியை மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஐக்கிய அரசு அமீரகம் தெரிவித்துள்ளது.
எந்த வகையிலான விபத்து? விபத்துக்கான காரணம் என்ன? உயிரிழந்த ராணுவ வீரர்களின் விரவம் உள்பட எந்த தகவலையும் அமீரக அரசு வெளியிடவில்லை.