< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தாக்குதல் - 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

கோப்புப்படம்

உலக செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தாக்குதல் - 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

தினத்தந்தி
|
8 Sept 2023 1:56 AM IST

பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்வா மாகாணத்தில் சித்ரால் மாவட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இரண்டு ராணுவ முகாம்கள் உள்ளன. இதன் மீது திடீர் என பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்