< Back
உலக செய்திகள்
பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
உலக செய்திகள்

பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

தினத்தந்தி
|
13 July 2023 1:44 AM IST

பிரேசில் மதுபானவிடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.

சாவ் பாலோ,

பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ளது பார்க் பாரைசோ நகரம். அங்கு நட்சத்திர மதுபானவிடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உட்கார்ந்து அதிகமானோர் நள்ளிரவில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மகும்பல் ஒன்று வந்தது. திபுதிபுவென விடுதிக்குள் அவர்கள் புகுந்து தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் உள்னே அமர்ந்திருந்தவர்கள் பயத்தில் அலறினர். தாக்குதலை நடத்திவிட்டு அந்த மர்மகும்பல் தப்பியோடியது. இதுகுறிந்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த திடீர் தாக்குதலில் விடுதிக்குள் இருந்த 4 பேர் உடலில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சாவ் பாலோ நகரில் பயங்கரவாத செயல்களில் செயல்படும் இருவேறு கும்பலுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்