< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் பட்டாசு கடை தீப்பிடித்து 4 பேர் பலி
|28 May 2023 1:51 AM IST
சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
பீஜிங்,
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள டச்செங் பகுதியில் ஒரு பட்டாசு கடை உள்ளது. இங்கு திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். படுகாயம் அடைந்த 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிலர் மாயமாகி உள்ளதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் அந்த கடை சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.