< Back
உலக செய்திகள்
மங்கோலியாவில் பனிக்குவியலில் கார் சிக்கியதால் 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
உலக செய்திகள்

மங்கோலியாவில் பனிக்குவியலில் கார் சிக்கியதால் 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

தினத்தந்தி
|
13 Jan 2024 2:45 AM IST

மங்கோலியாவில் சாலைகள், வீதிகள் என காணும் இடமெங்கும் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன.

உலன்பேட்டர்

மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகள் என காணும் இடமெங்கும் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும்படி நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் சுக்பாதர் மாகாண நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருந்தனர். அப்போது சாலையில் இருந்த பனிக்குவியலில் அந்த கார் சிக்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று காரை மீட்டனர். எனினும் அந்த காரில் இருந்த 4 பேரும் மூச்சுத்திணறி பலியாகினர்.

மேலும் செய்திகள்