< Back
உலக செய்திகள்
நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 4 இந்தியர்கள் பலி
உலக செய்திகள்

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 4 இந்தியர்கள் பலி

தினத்தந்தி
|
12 April 2023 3:18 PM IST

இந்தியாவில் இருந்து காரில் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.

காத்மண்டு,

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருந்து 5 பேர் காரில் நேபாளத்தின் காத்மண்டுவுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்த்ஹுலி மாவட்டத்தில் உள்ள மலைப்பங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உயிரிழந்த எஞ்சிய 4 இந்தியர்களின் உடலை மீட்பதில் சிக்கல் நிலவுவதால் நேபாள ராணுவத்தின் உதவி கேட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறையிடம் நேபாள அரசு தகவல் கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்