< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
முன்பு இசைக்கலைஞர்.. இப்போது ராணுவ வீரர்: போர்க்களத்தில் வயலின் வாசித்த கண்கலங்க வைக்கும் காட்சிகள்
|26 Sept 2022 2:49 PM IST
உக்ரைனில் இசைக்கலைஞர் ஒருவர் வயலின் பிடித்த கைகளால் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு ரஷியாவுக்கு எதிராக போரில் ராணுவ வீரராக களம் இறங்கியுள்ளார்.
கீவ்,
ராணுவத்தில் இணைந்து ரஷியாவுக்கு எதிராக போராடும் உக்ரைனிய இசைக் கலைஞர் ஒருவர் வயலின் வாசிக்கும் வீடியோ இணைய வாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
7 மாதங்களுக்கு முன்பு வரை மகிழ்ச்சியாக வயலின் வாசித்து உக்ரைனியர்களை உற்சாகம் அடையச் செய்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர் தெருவோர இசைக்கலைஞர் மொய்சி பொண்டரென்கோ.
ஆனால் இப்போது வயலின் பிடித்த கைகளால் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு ரஷியாவுக்கு எதிராக போரில் ராணுவ வீரராக களம் இறங்கியுள்ளார். போருக்கு மத்தியிலும், போர்க்களத்தில் நின்று மொய்சி மெய்மறக்கச் செய்யும் வகையில் வயலின் வாசித்த வீடியோ காண்போரைக் கலங்க வைத்துள்ளது.