< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே தாய்லாந்துக்கு பயணம்
|11 Aug 2022 4:47 PM IST
சிங்கப்பூரில் இருப்பதற்கான அனுமதி காலவதியான நிலையில், கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து புறப்பட்டார்.
கொழும்பு,
இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் ஏறத்தாழ ஒரு மாதம் காலம் கோத்தபய ராஜபக்சே தங்கியிருந்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அங்கிருந்து தாய்லாந்து புறப்பட்டுள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்து வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.