< Back
உலக செய்திகள்
கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின்னர் பேரணியில் மீண்டும் பங்கேற்று பேசிய இம்ரான்கான்
உலக செய்திகள்

கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின்னர் பேரணியில் மீண்டும் பங்கேற்று பேசிய இம்ரான்கான்

தினத்தந்தி
|
27 Nov 2022 12:53 AM IST

இம்ரான்கான் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தார்.

அந்த வகையில் கடந்த 3-ந்தேதி பஞ்சாப் மாகாணம் வாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலதுகாலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்து வந்த இம்ரான்கான் மீண்டும் அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்பேன் என கூறி வந்தார். ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என பலரும் அவரை அறிவுறுத்தினர்.

அதை பொருட்படுத்தாத இம்ரான்கான் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் செய்திகள்