< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கியூபாவில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ
|25 Feb 2023 9:51 PM IST
காட்டுதீயால் இதுவரை சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
ஹவானா,
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து சுமார் 800 கி.மீ. தொலையில் உள்ள ஹால்குவின் மாகாணத்தில் 'பினாரஸ் டி மயாரி' என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது. அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களும், தேயிலை தோட்டங்களும் இந்த மலைத்தொடரில் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 18-ந்தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இன்றோடு ஒரு வாரமாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.
இந்த காட்டுதீயால் இதுவரை சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து பற்றி எரியும் இந்த காட்டுத்தீயை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.