< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு
|23 July 2022 10:11 PM IST
10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவின் தென்மேற்கு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
பீஜிங்,
சீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லெஷன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் புணரமைப்பு பணிகள் நடந்து வந்தன.
அப்போது ஓட்டலின் முற்றத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அங்கு சென்று அதை ஆய்வு செய்தனர்.
இதுபற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "ஓட்டலின் முற்றத்தில் உள்ள கற்களில் கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் காணப்பட்டன. இந்த கால் தடங்கள் பதியப்பட்டு 10 கோடி வருடங்கள் இருக்கும். இந்த கால் தடங்கள் அழுக்கு அடுக்குகளால் புதைக்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட கால் தடங்கள் சவுரோபாட்ஸ் டைனோசர் வகையை சார்ந்தது" என்றனர்.
.