< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ
|24 April 2023 10:38 PM IST
நேபாளம் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
காத்மாண்டு,
நேபாளம் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானத்தை அவசரகால அடிப்படையில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அந்த விமானம் துபாய் நோக்கி செல்வதாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நேபாளத்தின் சுற்றுலா அமைச்சர் சுதன் கிரார்தி விமானம் துபாய் நோக்கிச் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பத்திரமாக அதன் இலக்கை நோக்கி செல்வதாக அவர் கூறியுள்ளார்.
அந்த விமானத்தில் 50 நேபாள பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.