< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நைஜீரியாவில் கனமழை, வெள்ளம்: 49 பேர் பலி
|29 Aug 2024 5:49 AM IST
நைஜீரியாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 49 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களான ஜிஜாவா, அடமவா, தரபா ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் சாலைபோக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை வெள்ளத்தால் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதால் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.