< Back
உலக செய்திகள்
கென்யாவில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 32 பேர் உயிரிழப்பு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

கென்யாவில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 32 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
25 April 2024 8:58 PM GMT

கென்யாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கின.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவியது. இதனால் கரையோரங்களில் வசித்து வந்த 2 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கென்யாவில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து கட்டாறு போல தாழ்வான பகுதிகளுக்கு பாய்ந்தோடியது. இதனால் குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமாகின. மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு அடித்து செல்லப்பட்டன. இந்தநிலையில் கென்யாவில் வெள்ளப்பெருக்கில் மூழ்கி 32 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

மேலும் செய்திகள்