< Back
உலக செய்திகள்
ஈரானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் - 53 பேர் உயிரிழப்பு என தகவல்
உலக செய்திகள்

ஈரானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் - 53 பேர் உயிரிழப்பு என தகவல்

தினத்தந்தி
|
30 July 2022 5:56 AM IST

ஈரானில் கனமழை காரணமாக சுமார் 400 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட 31 மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 400 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ஆல்போர்ஸ் மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 16 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் இன்னும் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்