< Back
உலக செய்திகள்
ஈரானில் திடீர் வெள்ளம்: 17 பேர் பலி
உலக செய்திகள்

ஈரானில் திடீர் வெள்ளம்: 17 பேர் பலி

தினத்தந்தி
|
23 July 2022 1:11 PM IST

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் ஃபர்ஸ் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக அம்மாகாணத்தின் இஸ்டபென் நகரில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ரவுட்பெல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இந்நிலையில், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்