பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 சீனர்கள் பலி
|பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் பாகிஸ்தானை சேர்ந்த கார் டிரைவர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அணை கட்டுமானத்திற்காக வாகனத்தில் சென்ற சீனப் பொறியாளர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தசு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பஸ்சில் நடந்த குண்டு வெடிப்பில் 9 சீனர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.