< Back
உலக செய்திகள்
புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்.. தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்
உலக செய்திகள்

புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்.. தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்

தினத்தந்தி
|
28 May 2023 11:30 AM IST

டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

ஜப்பான்,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் இருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்தார்.

ஒசாகா நகரிலிருந்து புல்லட் ரெயிலில் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து டோக்கியோ சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, ஜப்பான் முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வரவேண்டும் என்றும், அழைப்பு விடுக்க இருக்கிறார்.


மேலும் செய்திகள்