< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
ஜப்பானில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்...தொழிற்சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

27 May 2023 5:30 PM IST
தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட கோரிக்கை விடுத்தார்.
ஜப்பான்,
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள, மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவும் கோரிக்கை விடுத்தார்.
ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின்..தொழிற்சாலையை விரிவுபடுத்த கோரிக்கைhttps://t.co/0ilMK9KBmb#Stalinmk #japanvisit #ThanthiTV
— Thanthi TV (@ThanthiTV) May 27, 2023