< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவின் மாண்ட்கோமெரி நகர மேயராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க பெண்
|11 Jan 2024 7:42 PM IST
கடந்த 24 ஆண்டுகளாக மாண்ட்கோமெரியில் வசிக்கும் நீனா சிங், 2016 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்ட்கோமெரி நகர மேயராக பதவியேற்ற முதல் சீக்கிய மற்றும் இந்திய-அமெரிக்க பெண் என்ற சாதனையை நீனா சிங் படைத்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக மாண்ட்கோமெரியில் வசிக்கும் நீனா சிங், 2016 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
கவுன்சில் உறுப்பினராக இருந்து பின்னர் துணை மேயராக பதவி வகித்த நீனா சிங் தற்போது மேயராகி அசத்தியுள்ளார். மேயராக பதவியேற்றது குறித்து பேசிய நீனா சிங், நியூஜெர்சி மாகாணத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்றும், தனக்கு ஆதரவளித்த கமிட்டி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.