< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; உயிரிழப்பு 53 ஆக உயர்வு; 1,000 பேர் மாயம்
|11 Aug 2023 12:59 PM IST
ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது, மவுயி தீவில் 1,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஹானலூலூ,
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது.
இந்த காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது, சுமார் 1,000 பேர் காணமால் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு கடற்கரையில் உள்ள சுற்றுலா நகரமான லஹைனா பெருமளவில் தீக்கிரையாகி உள்ளது. சுமார் 1,700 கட்டிடங்கள் வரை தீயில் சேதமடைந்துள்ளதாக அந்தத் தீவின் ஆளுநர் ஜோஷ் க்ரீன் தெரிவித்துள்ளார்.