< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் பங்கு சந்தை அலுவலகத்தில் தீ விபத்து
உலக செய்திகள்

பாகிஸ்தான் பங்கு சந்தை அலுவலகத்தில் தீ விபத்து

தினத்தந்தி
|
8 July 2024 1:14 PM IST

பாகிஸ்தான் பங்கு சந்தை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அந்நாட்டு பங்கு சந்தை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தின் 4வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகம் வைக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் வலைதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மின்சார சர்க்யூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியானதை அடுத்து இதனை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்