< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தாய்லாந்தில் இரவு நேர மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து; 13 பேர் உடல் கருகி பலி! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்
|5 Aug 2022 10:10 AM IST
தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாங்காக்,
தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி பப் என்ற இரவு நேர மதுபான விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து எற்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதில், பலர் தங்கள் உடல்களில் தீக்காயங்களுடன் பப்பில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் உள்ளன.
தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.