< Back
உலக செய்திகள்
லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 8 பேர் பலி
உலக செய்திகள்

லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 8 பேர் பலி

தினத்தந்தி
|
24 Jun 2024 1:16 PM IST

லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

சியோல்,

தென்கொரிய நாட்டின் ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

மேலும், தொழிற்சாலையில் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். சிலர் மீட்கப்பட்ட நிலையில் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்த 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 23 தொழிலாளர்கள் நிலை என்ன? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அவர்களும் தீ விபத்தில் சிக்கி இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மேலும் செய்திகள்